![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiShJYpMkBeeHCt0tJm88oy0yGAbdWU1QyLy_mKcYhcq-B0eYXIexdpbIUXcsBMXKsKZ2cnvQQJ4LU3PjtdrmwuxWZqXETOGq3UL4bWF_vkKZ3tRBu164monda3xYVYA3fzMmMd0JRixF4/s320/Eyes.jpg)
பாலை
வருடத்தின் இறுதிப் பருவகாலம்மெல்ல மெல்லக் கழிகின்றதுகரையோரங்களிலிருந்துதிரும்பிவிட்டன நீர்ப்பறவைகள்
குலவித் திரிந்த ரீங்காரங்களைமுயங்கிக் கலந்த குறுகுறுப்பைஅந்தர வெளியில் விட்டுஇப்போது வெறுமையுற்றிருக்கும்கூடுகளுக்குள்ஞாபகங்களாய்மெது மெதுப்பாய் இறைந்து கிடக்கின்றனஅவற்றின் சில சிறகுகள்
வேர்விட்டு உறுதியாகிபூரித்துக் கிடந்த சோலையின் வனப்பைஉறிஞ்சத் தொடங்கியிருக்கின்றனகோடையின் துன்புறுத்தும் நாவுகள்
அழகுதிர்க்கும் மரங்களோசெழிப்படைவதை நிறுத்தியுள்ளனநோய் பிடித்துச் சோர்ந்துகாய்ந்த நிலத்தினை மேய்ந்துகாற்று நாறியது
காலத்தின் கண்முன்னே கரைகின்றதுநினைவின் பொற்காலம்
உத்தரவிற்காகக் காத்திருக்கின்றகடைசி நிமிடங்களின் பதைபதைப்புகளோடுவிரக்தியுற்றிருக்கும் இறுதி மனோபாவத்தோடுஓடி மறையும் வசந்தகாலத்தின் கைகளுக்குள்வைக்கிறேன்உணர்வு பீறிட்டிருக்கின்ற என் கண்ணீரைதீராத அன்பின் காணிக்கையை
பிரளயங்களைத் தோன்றச் செய்யாமல்நேசத்தின் தடயங்களைஅழித்துச் செல்கிறது வசந்தகாலம்செல்லப் பிராணியின்அகால மரணத்தைப் போன்று

No comments:
Post a Comment